Saturday, September 28, 2013
Sunday, July 14, 2013
Sunday, June 23, 2013
ஹ்யூகோ சாவேஸ் (1954-2013):ஒரு பிசாசைப் “பிசாசு” என்றழைத்தவர்
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி மற்றும் சீனாவின் திசை விலகல் ஆகியவற்றிற்குப் பின் உலகளவில் இடது சாரி அரசியலுக்கு ஒரு ஆதர்சமாக இருந்த சாவேசுக்கு எழுதப்பட்ட ஒரு இரங்கற் கட்டுரையின் தலைப்பு “உலகைக் குலுக்கிய பதினாலு ஆண்டுகள்.” சாவேசின் இந்தப் பதினாலு ஆண்டு கால ஆட்சி (1999 – 2013) உலகைக் குலுக்கியதோ இல்லையோ அமெரிக்காவிற்கும் பிற ஏகாதிபத்தியங்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ‘செக்’ வைத்ததென்பது மறுக்க இயலாத உண்மை.
வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்
அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக அவள் தன்சி மருத்துவமனையை வந்தடையும் போது அவளுக்கு முன் 80 பெண்கள் அவளைப் போலவே கிழிந்த யோனியுடன்…. காத்திருந்தார்கள்.
“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!
‘‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன. ‘த்துப்..’ பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது.
Friday, June 7, 2013
Saturday, May 25, 2013
மைக்கல் ஏஞ்சலோ ஏன் அழுதார்?
ரெஜினால்ட்
ஹொராஸ்
ப்ளைத்
என்ற
ஆங்கில
எழுத்தாளர்.
ஜப்பானியக்
கலாசாரத்தினால்
கவரப்பட்டவர்.
ஜென்
பற்றி நிறைய
எழுதியவர்.
ஒருமுறை அவரிடம்
யாரோ கேட்டார்கள்.
‘ஜென்
என்கிற
விஷயத்தை எங்களுக்குப்
புரியும்படி ஒரே வார்த்தையில்
விளக்கமுடியுமா?’
’முடியும்’ என்றார் ப்ளைத்.
அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை:
‘பர்ஃபெக்ஷன்.’
‘ஜென் என்றால் எதையும்
பர்ஃபெக்டாகச் செய்வது’ என்று ப்ளைத்
குறிப்பிட்டபோது மற்றவர்கள்
சிரித்தார்கள்.
Wednesday, January 16, 2013
பூலான் தேவி.....
ஒரு பெண் தலித் என்பதற்காக அவளை ஒரு ஜாதி தீவிரவாதி அவளின் பெற்றோர் முன்னாலையே கற்பழிப்பான், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்களை போலிஸ் கைது செய்துவிட்டு கொள்ளைக்காரி என்று சொல்லி அந்த பெண்ணையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து பத்து பேர் கற்பழிப்பார்கள், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் மறுபடியும் ஊருக்கு நடுவே வைத்து பாலியல் பலத்காரம் செய்வார்கள், பதினைந்து வயது சிறுமிக்கு நடந்த கொடுமைகளை தட்டிகேட்க எவனுக்கும் இங்கே துணிவில்லாமல் போனது,
Monday, January 7, 2013
இயற்கையின் மாறாத விதிகளில் ஒன்று பிரிவு
அந்த புதிய நட்பு வசீகரமாக இருந்தது. பல பால்ய நட்புகளின் எதார்த்தமான அன்பை விட இந்த அலங்கரிக்க பட்ட கரிசனம் அற்புதமாக பட்டது. நாட்கள் கடந்தன. அவள் தந்த அன்பை வரவு வைக்காததால் என்னிடமிருந்து போனதுக்கும் கணக்கு இல்லாமல் இருந்தது. சின்னஞ்சிறு ஊடல்கள் பெரிய அளவில் நெருக்கத்தை உண்டாக்கின. அவள் மேல் தெறிக்கும் வெயில் மீது கூட எனக்கு கோபம் வரும். அவள் ஆழ்ந்து ரசிக்கும் அனைத்தின் மீதும் எனக்கு காதல் வரும். சிறிதாக அவள் வருத்த பட்டாலும் பெரிதாக கண்ணீர் வடிப்பேன். அடிக்கடி மோதி கொள்வோம், இறுமாப்பை விட்டு இயல்பாக அவளிடம் சரணடைவேன். இயற்கையின் மாறாத விதிகளுள் ஓன்று பிரிவு. எங்களுக்கும் வந்தது. நாடு கடந்து வந்தேன். அவளின் நிறமும் மாற தொடங்கியது.
Sunday, January 6, 2013
இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையரசன்
நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.
இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர்.
மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள்
புதுகை பூபாளம் கலைக்குழுவின் தோழர் பிரகதீஸ்வரன் 'இலங்கைத் தோழர் ஒருவரை கட்டாயம் சந்திக்க வேண்டும், முடிந்தால் ஒரு நேர்காணல் எடுங்கள்' என்று கூறி, அறிமுகப்படுத்தினார். அவருடனான உரையாடலில், ஏற்கனவே இங்கு கூறப்பட்டிருந்த செய்திகளுக்கு மாறாக, பல புதிய தகவல்களைக் கூறினார். அந்த உரையாடல் கீற்று வாசகர்களுக்காக இங்கு தரப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக தோழரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. - கீற்று நந்தன்
கேள்வி: இலங்கை மலையக மக்களின் நிலைமை போருக்கு முன் எப்படி இருந்தது? மற்றும் போருக்குப் பின் எவ்வாறு உள்ளது?
பதில்: போருக்கு முன் அல்லது பின் என மலையக மக்களின் நிலைமையை ஒப்பிடும் அளவுக்கு பாரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்று சொன்னால் மலையக மக்கள் போரினால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் மறைமுகமான எல்லா பாதிப்புகளுக்கும் மலையக மக்கள் ஆளானார்கள். அதாவது முழு நாட்டில் வசிக்கிற தமிழ் மக்கள் யாராக இருந்தாலும் எந்தப் பகுதியில் வசித்தாலும் பொலிஸிடம் தங்களைப் பற்றிய பதிவு செய்யவேண்டும், அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் ஏதாவது தாக்குதல் சம்பவம் நடந்தால் அதன் எதிரொலியாக மலையகப் பகுதிகளிலும் பொலிஸின் கடுமையான சோதனைகள் மற்றும் தேடுதல்கள் இருக்கும். அதே நேரத்தில் முழு நாட்டிலும் இருந்த பிரச்சனை சோதனைச் சாவடிகள். இது வடக்கு கிழக்கு மட்டுமல்ல மலையகப் பகுதிகளிலும் கடுமையாக இருந்தது.
இண்டர்வியூ - வில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு அலசல்.
இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல் வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)
துபாய் நாட்டில் தடை செய்யப்பட்ட சில உணவுப் பொருட்கள்.
சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.
அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.
துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
Friday, January 4, 2013
மாயன் இன மக்கள் எப்படி அழிந்தனர்..
2006ம் ஆண்டு 'மெல் கிப்சன்' (Mel Gibson) என்பவரால் 'அபோகலிப்டோ' (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது அதில் கடைசியில் கப்பல்களை காட்டி அவை அங்கு வருவது போல் முடிப்பார்கள் . அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. "மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!" என நீங்கள் நினைக்கலாம்.
உண்மைதான்! ‘அபோகலிப்டோ’ என்னும் படம், சாதாரணமாகப் பார்க்கும் போது மிக நல்லதொரு படம்தான். ஆனால், அதில் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Wednesday, January 2, 2013
சீனி _ சில கசப்பான உண்மைகள்..!
மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி,
Tuesday, January 1, 2013
டேனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு வரும் 1001 அற்புதத் தகவல்கள் : பாகம் 03
டேனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு வரும் 1001 அற்புதத் தகவல்கள் : பாகம் 03
December 28, 2012
ஒரு நாளில் 14 மில்லியன் மக்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்…
41. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள 150 மில்லியன் கி.மீ தூரத்தை சூரிய ஒளி வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். நவக்கிரகங்களின் நெப்டியூனை சென்றடைய 4 மணி நேரம் ஆகும், அதாவது பூமிக்கு வருவதைப் போன்று 30 மடங்கு அதிக நேரம் எடுக்கும்.
Subscribe to:
Comments (Atom)






