டேனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு வரும் 1001 அற்புதத் தகவல்கள் : பாகம் 03
December 28, 2012
ஒரு நாளில் 14 மில்லியன் மக்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்…
41. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள 150 மில்லியன் கி.மீ தூரத்தை சூரிய ஒளி வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். நவக்கிரகங்களின் நெப்டியூனை சென்றடைய 4 மணி நேரம் ஆகும், அதாவது பூமிக்கு வருவதைப் போன்று 30 மடங்கு அதிக நேரம் எடுக்கும்.
42. அமெரிக்காவின் சில சிறிய நகரங்களுக்கு விநோதமான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாக மேரிலான்டில் ஒரு நகரத்தின் பெயர் விபத்து (Accident), அலபாமாவில் ஒரு நகரத்தின் பெயர் சோளம் எரிந்த நகரம் (Burnt Corn), ரென்னெஸ்ஸ மாநிலத்தில் ஒரு நகரின் பெயர் (Diffiecult) கஸ்டம், புளோரிடாவில் ஒரு நகரின் பெயர் குளிர் பாதுகாப்பு (Frostproof), சவுத் கரோலினாவில் ஒரு நகரத்தின் பெயர் தொண்ணுhற்றி ஆறு (96). 43. நாங்கள் ஓய்வாக சாய்ந்து கிடந்தாலும் நமது ஈரல் வழியாக நிமிடத்திற்கு 1.2 லீட்டர் இரத்தம் ஓடுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு நாளில் 700 லீட்டர் இரத்தம் ஈரலூடாகக் கடத்தப்பட்டிருக்கும். அதேநேரம் சிறு நீரகங்கள் முதிர்வடையாத சலத்தை 180 லீட்டர் அளவுக்கு அலசிய பின்புதான் 1.5 லீட்டர் சிறுநீரை உருவாக்குகின்றன. நாம் குடித்த நீர் சுமார் ஒன்பது மணி நேரத்தில் சிறு நீராக வெளியேறும். 44. திமிங்கிலங்களின் ஓரினத்தின் பல் ஒன்றின் நீளம் இரண்டு மீட்டர்களாக உள்ளது. காண்டாமிருகத்தின் கொம்புபோல இது வளர்ந்திருக்கும். 45. நாங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும்போது, நமக்கு மட்டும்தான் பிறந்த நாள் என்று எண்ணிவிடக் கூடாது, அதே தினம் உலகம் முழுவதும் 13 முதல் 14 மில்லியன் மக்கள் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். 46. வைரக்கற்கள் நிலக்கரி போன்றவையே இவை உலகத்தின் மற்றெந்தப் பொருட்களும் தாங்காத அளவு பாரத்தை தாங்கி நசிபடும்போதுதான் உருவாகுகின்றன. உலகத்தின் அதிகூடிய வைரமாவை இந்தக் கற்களே. 47. நவக்கிரகங்களில் அதிகூடிய குளிருள்ள கிரகம் நெப்டியூனின் ஒரு சந்திரனான ரிரிற்றோனில் நிலவுகிறது. இதனுடைய மேற்பரப்பு குளிர் -271.6 பாகையாகும், அனைத்தும் ஸ்தம்பித்து போகும் – 273 பாகைக்கு மிக அண்மையில் உள்ளது. 48. நாம் பாவிக்கும் சி.டி ( இறுவட்டு ) மொத்தம் 20.000 தடவைகள் சுழலக்கூடியவாறு செய்யப்பட்டுள்ளது. 49. சீனாவில் உள்ள ஒருவகை மூங்கில்கள் (Phyllostachys bambusoides) 120 வருடங்களுக்கு ஒரு தடவை மட்டும் பூக்கின்றது. இது கி.பி. 999 ஆணடில் இருந்து ஒவ்வொரு 120 வருடங்களுக்கும் ஒரு தடவை பூத்து வருகிறது. குறிஞ்சி மலர்கள் 12 வருடங்களுக்கு ஒரு தடவை பூப்பது கவனிக்கத்தக்கது, அதனுடன் ஒப்பிட்டால் இதன் பூப்புக்காலம் பத்து மடங்கு அதிகம். 50. மனிதர்களுடை தோலின் நிறை உடலின் நிறையில் 16 வீதமாக இருக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு மனிதருடைய தோலின் எடை 11 கிலோக்களாக இருக்கும். இந்த தோலானது 20 கி.மீ நீளமான இரத்த ஓட்ட கால்வாய்களையும், 80 கி.மீ நீளமான நரம்பு வழியையும் தாங்கிய கடதாசி மட்டைபோல நிற்கிறது. 51. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயகரா நீர்வீழ்சியின் விளிம்பில் இருந்து ஒரு நிமிடத்திற்கு கொட்டுப்படும் நீரின் அளவு 128 மில்லியன் லீட்டர்களாகும். 52. நூறு மனிதர்களை ஓரிடத்தில் கூட்டி அவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாக மாற்றி மாற்றி போட்டு நிறுத்தினால் 75.287.520 விதமாக நிறுத்தலாம். நூறு பேரை குழுக்களாக்கி இவ்வளவு எண்ணிக்கையை உருவாக்க முடியும் என்றால் மனிதர்களில் ஏற்படக்கூடிய பிளவுகளை எண்ணிப்பாருங்கள். 53. அமெரிக்காவின் விமான சேவையான லொக்கீட்ஸ் எதையும் எளிமையாக மலிவாக செய் என்ற வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது. இதை அடியொற்றி இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் அமைக்கப்பட்ட அமெரிக்காவின் எக்ஸ்.பி : 80 விமானங்களை அமைக்கும் நிலையம் வெறும் ஐந்து இலட்சம் டாலர்களில் உருவாக்கப்பட்டது. 54. காரின் வேகத்தை இரட்டிப்பாக அதிகரித்தால் பிரேக் இழுத்துச் செல்லும் தூரமும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கருதக்கூடாது, அந்த நேரம் பிரேக் நம்மை அறியாமல் நாலு மடங்கு தூரம் இழுத்துப் போகும். 55. ஐஸ்பழத்தை சீனா சென்றபோது மார்க்கோபோலோ சுவைத்துப் பார்த்துள்ளார், பின்னர் அதைத் தயாரிக்கும் முறையை அங்கிருந்து மற்றைய நாடுகளுக்கு அவரே எடுத்து வந்தார். 56. சூரியக் குடும்பத்தின் வெளிப்பகுதியில் உள்ள புளுட்டோ கிரகம் சூரியனை சுற்றி கால்பங்கு தூரம் வரும்போது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புதன் கிரகம் 265 தடவைகள் சூரியனை சுற்றிவந்துவிடும். 1930 ல் இருந்து இது அவதானிக்கப்பட்டு வருகிறது. 57. ஸ்டோபெர்ரி பழம் (Jordbær) என்பது உண்மையில் ஒரு பழமல்ல. இந்த மரத்தில் உருவாகும் பூவின் விதைகளே இணைந்து இப்படியொரு பழமாக மாற்றமடைகிறது. உண்மையில் சிறிய விதைகளின் தொகுப்பே இந்தப் பழம். 58. மனிதர்களுடைய இரண்டு கண்களிலும் மொத்தம் 127 மில்லியன் பார்வை செல்கள் இருக்கின்றன, ஆனால் காதால் கேட்டதும் பார்ப்பதற்காக இதில் 20.000 செல்களே பாவனைப்படுத்தப்படுகின்றன. 59. எலிசபெத் பத்தோரி ( 1560 – 1614 ) என்ற அரசி தான் நித்திய இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 650 அடிமைகளை சித்திரவதை செய்து, கொன்று அவர்களுடைய இரத்தத்தில் நீச்சலடித்து யாகம் செய்தாள். 60. உலகப்படமானது நான்கு வர்ணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அருகருகாக இருக்கும் இரண்டு நாடுகள் ஒரே நிறத்தில் அடையாளம் காட்டப்படக்கூடாது என்பதாகும். இந்த வழமை சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், அது 1976ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டது.

அலைகள் மாஸ்ரர் பேஜ் 28.12.2012
மொழி பெயர்ப்பு : கி.செ.துரை
No comments:
Post a Comment