அந்த புதிய நட்பு வசீகரமாக இருந்தது. பல பால்ய நட்புகளின் எதார்த்தமான அன்பை விட இந்த அலங்கரிக்க பட்ட கரிசனம் அற்புதமாக பட்டது. நாட்கள் கடந்தன. அவள் தந்த அன்பை வரவு வைக்காததால் என்னிடமிருந்து போனதுக்கும் கணக்கு இல்லாமல் இருந்தது. சின்னஞ்சிறு ஊடல்கள் பெரிய அளவில் நெருக்கத்தை உண்டாக்கின. அவள் மேல் தெறிக்கும் வெயில் மீது கூட எனக்கு கோபம் வரும். அவள் ஆழ்ந்து ரசிக்கும் அனைத்தின் மீதும் எனக்கு காதல் வரும். சிறிதாக அவள் வருத்த பட்டாலும் பெரிதாக கண்ணீர் வடிப்பேன். அடிக்கடி மோதி கொள்வோம், இறுமாப்பை விட்டு இயல்பாக அவளிடம் சரணடைவேன். இயற்கையின் மாறாத விதிகளுள் ஓன்று பிரிவு. எங்களுக்கும் வந்தது. நாடு கடந்து வந்தேன். அவளின் நிறமும் மாற தொடங்கியது.
அவள் பக்கம் வந்த புதிய நட்புகள் என் பக்கமிருந்து அவளை இலகுவாக அழைத்து சென்றது. என்னால் என் உண்மை நட்புகளுக்கு நடந்தவை இவளால் என் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. வளர்த்தெடுத்த அன்பு அசுத்தமற்றதால் என் வன்மங்கள் அவளை எதுவும் செய்யவில்லை. தேவை படும்போது தேனொழுக பேசுவாள், தேவை இல்லை என்றால் தேளாக கொட்டுவாள். அழுவதை தவிர அவள் மீது ஆத்திரம் வருவதில்லை. இருந்ததை எல்லாம் இழந்தேன். திடீரென்று ஒருநாள் நிரந்தரமாக பிரிவோம் என்றாள். "நித்திரையில் கூட என் நிழல் உன்னை விட்டு பிரியாது" என்றாயே?, காமத்தின் உச்சத்தில் காதுகளுக்கு மட்டும் சொல்லப்படும் ரகசியங்கள் மன்றத்தில் ஏறுவதில்லை. விடை பெற்று செல்கிறேன்
விழிகளின் ஓரத்தில் கண்ணீரோடு -
உன்னை இழந்ததற்காக அல்ல,
உன்னால் இழந்தவைக்காக...
நிஜங்களை விட போலிகள் தத்ரூபமாக இருக்கும் என்று படித்தது நியாபகம் வருகிறது.
நல்ல மனிதர்களை போல நமக்குள்ளே வருபவர்களின் சுய அடையாளங்கள் வெளிச்சத்துக்கு வரும்போது அவர்களின் மேல் வரும் கோபத்தை விட நம் மீது வரும் வெறுப்புதான் அதிகமாக இருக்கிறது.

- மனோ ஜோ
No comments:
Post a Comment