Wednesday, December 19, 2012

USE AND THROUGH




செல்ஃபோன் கடையில ஃபோன் வாங்கறதுக்கு ஒரு கூட்டம் அலை மோதுதுன்னா, அந்த செல்ஃபோன் கம்பெனி வைத்திருக்கும் சர்வீஸ் சென்டர்கள்ல அதவிட அதிக கூட்டம் ரிப்பேருக்கு கொடுத்திட்டு காத்துகிட்டு இருக்கு.. எலெக்ட்ரானிக் பொருட்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கி னாலும் அதிகபட்சம் 2 வருஷத்துக்கு மேல அந்தப்பொருள் கன்டமாகிப்போவுது.. தூக்கிப்போட்டுட்டு புதுசா வாங்க எத்தனை பேரால முடியும்?
கம்ப்யூட்டர்ல கூட Keyboard, mouse,smps, power cord, card reader, dvd rom, writer இப்படி எல்லாமே ஒரு வருஷத்துக்குள்ள ரிப்பேர் ஆகிடுது. முன்னெல்லாம் PCB க்கு ஹார்ட் டிஸ்க்குக்கு மூனு வருஷம் வாரண்டி கொடுத்தாங்க. 3 வருஷத்துக்குள்ள 30 டு 40 பர்சென்ட் கம்ப்ளைன்ட், ரிப்பேர்.. அத ரிப்பேர் அல்லது replacement செஞ்சு கொடுத்ததுல வெறுத்துப்போன கம்பெனிங்க இப்போ அதை எல்லாத்தையும் ஒரு வருஷமா வாரன்ட்டியா மாத்திட்டாங்க. மேலை நாடுகள் போல் எல்லாப் பொருளையும் use and through level- அத உற்பத்தி செய்யற கம்பெனிக்காரங்க கொண்டுவந்துட்டாங்க. உழைச்சு சம்பாதிச்சு விலை கொடுத்து வாங்கற பொருள் கொஞ்ச நாளாச்சும் நமக்கு உழைக்க வேணாமா? வெறுமனே உட்கார்ந்து சம்பளம் வாங்குவோர்களுக்கு வேண்டுமானால் use and through method பொருந்தலாம். இன்னைக்கும் நம்ம நாட்ல பெரும்பாலானோர் 5 ரூபாய்கு பேனா வாங்கிட்டு 2 ரூபாய்க்கு கடை கடையா ஏறி ரீஃபில்கள் தேடுற நிலைமையில தான் இருக்காங்க. நம்மளோட பொருளாதார நிலைமை அப்படி இருக்கு. எதுக்கெடுத்தாலும் மக்களுக்கு வாங்கும் சக்தி கூடிப்போச்சுன்னு சொல்றவங்க, வாங்கும் சக்தி கூடிப்போனவங்கள கணக்கெடுத்துப் பார்த்தா இன்றளவும் இந்தியாவில இருக்கிற மொத்த மக்கள் தொகையில் 15 அல்லது 20 சதவீதம் பேருதான் இருக்காங்க.. இப்படி எல்லாத்துலயும் விலைய கூட்டறதும், சப்பை கட்டி பேசறதும் அவங்கள வச்சுத்தான். அப்படீன்னா அந்த 80 டு 85 சதவீதம் பேரோட நிலைமை வாழ்க்கையில் போராட்டமாய்த்தானே இருக்கின்றது... அவர்களும் இவர்களுக்கு சமமாக அல்லவா அங்க இங்க கடனை வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கின்றது? அவர்கள் எல்லாம் இப்படி use and through level-க்கு தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளத்தான் முடியுமா?

 நன்றி : உதய் குமார் .

No comments:

Post a Comment