சன் டிவியில் சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அந்த கிளைமாக்ஸ் மனதை கனக்க வைக்கின்றது. இந்த படத்தை பற்றி சாரு உயிர்மையில் எழுதியிருந்த விமர்சனம் நினைவுக்கு வந்தது. அந்த கட்டுரையை தேடிப்பிடித்து அந்த வரிகளை மீண்டும் இங்கே பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது
துளசி அழகரைத் தனி இடத்துக்கு வரவழைக்கிறாள். "எப்போதும், எந்த நிமிடமும் உயிருக்குப் பயந்து அரிவாளை இடுப்பில் செருகிக்கொண்டே வாழும் நான் உன்னிடம் மட்டும்தான் பயமில்லாமல் இருக்கிறேன்" என்று துளசியிடம் ஒருமுறை சொல்கிறான் அழகர். அதே போல் அவளைப் பார்க்கச் செல்லும்போது அவனிடம் அரிவாள் இருப்பதில்லை. கனகுவின் ஆட்கள் ஆயுதங்களோடு அழகரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். வெறும் கைகளால் அவர்களைத் தடுக்கிறான். அழகர். அப்போது அங்கே வரும் கனகு அழுது கொண்டிருக்கும் துளசியை அரவணைத்தபடி அழைத்துச் செல்லும்போது, “நீ நம் குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டாய் அம்மா” என்று சொல்வதைக் கேட்டதும் அழகர் தன் மேல் விழும் அரிவாள் வெட்டுகளைத் தடுப்பதை நிறுத்தி விடுகிறான். செத்து விழுகிறான். நீட்ஷேவின் Thus Spake Zarathustraவில் வரும் கிழவி சொல்வது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். Are you going to women? Don’t forget your whip … என்று ஜாரதுர்ஷ்ட்ராவிடம் சொல்லுவாள் அந்தக் கிழவி. தன் காதலி துளசியை முழுமையாக நம்பியதால் அழகர் தன் ஆயுதத்தை எடுத்துச் செல்லவில்லை. இவ்விஷயத்தில் அவன் ஆரம்பத்திலிருந்தே தன் நண்பன் பரமன் சொன்னதையும் கேட்காமல் போனான். இந்தப் படத்தின் கரு இதுதான். துரோகம். இந்தப் படத்தைப் பார்த்ததும் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீஸரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மற்றவர்கள் குத்தும்போது சலனமற்றிருக்கும் ஸீஸர், ப்ரூடஸும் தன்னைக் குத்துவதைப் பார்த்துவிட்டுத்தான் “Et tu, Brute! Then fall, Caesar” (Act 3: Scene 1) என்று சொல்லி வீழ்கிறான். ஆனால் ஜூலியஸ் ஸீஸரில் வரும் துரோகத்தைவிடக் காதலின் துரோகம் பெரிது. ஏனென்றால், Betrayal can only happen if you are in love என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காதலை விட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை. அதனால் தான் பெரும்பாலான கொலைகள் காதலை முன்வைத்து நடக்கின்றன. எல்லா விஷயங்களையும் சாரு பார்க்கும் விதமே தனிதான்.

நன்றி_ வினாயகமுருகன்.
No comments:
Post a Comment