பெண்கள் மீதான பாலியல் வன்முறையும் அடிப்படைவாதமும்...
டெல்லி பாலியல் வன்முறைக்குக் காரணமானவர்களில் ஒரு நபர் இரவு 9 மணிக்கு மேல் இப்படி அலைந்ததற்காகத்தான் இப்படிச் செய்ததாகச் சொல்லியுள்ளதைப் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் 'பாருக்கு' வந்த ஒரு பெண் இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும் பத்திரிக்கையில் வெளிவந்தது.
சமீப காலங்களில் மத, சாதி அடிப்படைவாதங்கள் பெருகி வருவதன் பின்னணியில் வைத்தும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.. மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் அந்தப் பெண் இப்படி அரைகுறையாக உடுத்தி வந்ததுதான் இப்படியான சம்பவங்களுக்குக் காரணம் என்றார். நமது தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இதே தொனியில் தலையங்கம் எழுதினார். பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் ‘பாரு’க்கெல்லாம் போனால் இபாடித்தான் ஆகும் என்கிற ரீதியில் அந்ந்தத் தலையங்கம் எழுதப்பட்டது.
இந்த அம்சத்தில் மத அடிப்படைவாதங்களுக்கிடையே வித்தியாசங்கள் கிடையாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ… எல்லா மத அடிப்படைவதிகளும் இப்படித்தான் சொல்கின்றனர். அவ்வளவு ஏன் மருத்துவர் இராமதாஸ் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் ஆட்டம் திரைப்படக் காட்சிகள் இருக்காது எனச் சொன்னதெல்லாம் இந்த ரகம்தானே.
காலம், வெளி எல்லாமே இங்கு பாலியல் நீதியாகவே கட்டமைக்கப்படுகின்றன. பொது வெளியும், இராக்காலங்களும் (குடும்பப்)பெண்களுக்குரியதல்ல, அவை ஆண்களுக்கே உரியன என்கிற மத்தியகால மனநிலை மீண்டும் புதுப்பிக்கப்படுவது வேதனை. காதலர்களைப் பிரித்து அடித்துத் துரத்தும் அடிப்படைவாதத்தின் கொடூர நீட்சிதான் இன்றைய டெல்லி சம்பவம். எல்லாவிதமான ஒழுக்க வாதங்களும் பெண்களுக்கு எதிராகவே அமையும் என்பதற்கு இது இன்னொரு சான்று.
நன்றி, Marx Anthonisamy.
நன்றி, Marx Anthonisamy.

No comments:
Post a Comment