Sunday, December 30, 2012
Saturday, December 29, 2012
சுப்பிரமணியபுரம் சாருவின் பார்வையில்..
சன் டிவியில் சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அந்த கிளைமாக்ஸ் மனதை கனக்க வைக்கின்றது. இந்த படத்தை பற்றி சாரு உயிர்மையில் எழுதியிருந்த விமர்சனம் நினைவுக்கு வந்தது. அந்த கட்டுரையை தேடிப்பிடித்து அந்த வரிகளை மீண்டும் இங்கே பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது
Tuesday, December 25, 2012
மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.
Monday, December 24, 2012
ஆட்டிசம் என்றால் என்ன ?
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது.
Friday, December 21, 2012
மாற்றம்
சமூக மற்றம் தனிமனித மாற்றத்தில் தொடங்குகிறது. தனிமனித மாற்றம் வாழ்வியல் அநுபவங்களிலும் பண்புப்பதிவுகளிலும் மலர்கிறது. பண்புப்பதிவுகளை ஏற்படுத்துவதில் கல்வியும் சமூகமும் அக்கறை எடுக்காதவரை காலத்தின் பரிணாமத்தில் வாழ்வியல் அநுபவங்களின் மூலம் மாற்றம் மலர நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும்....!!!
நன்றி - முருகன் ஆச்சாரி.
பாலியல் வன்புணர்ச்சி - டெல்லி மட்டுமல்ல..
பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….
கடந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பேருந்து கும்பல் பாலியல் வன்முறைக்காக ஒட்டுமொத்த தேசமுமே வீதியில் இறங்கிப் போராட வேண்டுமென்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
Thursday, December 20, 2012
பாலியல் வன்முறையும் அடிப்படை வாதமும்..
பெண்கள் மீதான பாலியல் வன்முறையும் அடிப்படைவாதமும்...
டெல்லி பாலியல் வன்முறைக்குக் காரணமானவர்களில் ஒரு நபர் இரவு 9 மணிக்கு மேல் இப்படி அலைந்ததற்காகத்தான் இப்படிச் செய்ததாகச் சொல்லியுள்ளதைப் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் 'பாருக்கு' வந்த ஒரு பெண் இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும் பத்திரிக்கையில் வெளிவந்தது.
சமீப காலங்களில் மத, சாதி அடிப்படைவாதங்கள் பெருகி வருவதன் பின்னணியில் வைத்தும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.. மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் அந்தப் பெண் இப்படி அரைகுறையாக உடுத்தி வந்ததுதான் இப்படியான சம்பவங்களுக்குக் காரணம் என்றார். நமது தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இதே தொனியில் தலையங்கம் எழுதினார். பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் ‘பாரு’க்கெல்லாம் போனால் இபாடித்தான் ஆகும் என்கிற ரீதியில் அந்ந்தத் தலையங்கம் எழுதப்பட்டது.
இந்த அம்சத்தில் மத அடிப்படைவாதங்களுக்கிடையே வித்தியாசங்கள் கிடையாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ… எல்லா மத அடிப்படைவதிகளும் இப்படித்தான் சொல்கின்றனர். அவ்வளவு ஏன் மருத்துவர் இராமதாஸ் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் ஆட்டம் திரைப்படக் காட்சிகள் இருக்காது எனச் சொன்னதெல்லாம் இந்த ரகம்தானே.
காலம், வெளி எல்லாமே இங்கு பாலியல் நீதியாகவே கட்டமைக்கப்படுகின்றன. பொது வெளியும், இராக்காலங்களும் (குடும்பப்)பெண்களுக்குரியதல்ல, அவை ஆண்களுக்கே உரியன என்கிற மத்தியகால மனநிலை மீண்டும் புதுப்பிக்கப்படுவது வேதனை. காதலர்களைப் பிரித்து அடித்துத் துரத்தும் அடிப்படைவாதத்தின் கொடூர நீட்சிதான் இன்றைய டெல்லி சம்பவம். எல்லாவிதமான ஒழுக்க வாதங்களும் பெண்களுக்கு எதிராகவே அமையும் என்பதற்கு இது இன்னொரு சான்று.
நன்றி, Marx Anthonisamy.
நன்றி, Marx Anthonisamy.
Wednesday, December 19, 2012
USE AND THROUGH
செல்ஃபோன் கடையில ஃபோன் வாங்கறதுக்கு ஒரு கூட்டம் அலை மோதுதுன்னா, அந்த செல்ஃபோன் கம்பெனி வைத்திருக்கும் சர்வீஸ் சென்டர்கள்ல அதவிட அதிக கூட்டம் ரிப்பேருக்கு கொடுத்திட்டு காத்துகிட்டு இருக்கு..
எலெக்ட்ரானிக் பொருட்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கி னாலும் அதிகபட்சம் 2 வருஷத்துக்கு மேல அந்தப்பொருள் கன்டமாகிப்போவுது.. தூக்கிப்போட்டுட்டு புதுசா வாங்க எத்தனை பேரால முடியும்?
ஆண்கள்
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்..?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
Sunday, December 16, 2012
Subscribe to:
Comments (Atom)





