Sunday, November 18, 2012

நினைவுகள்

அழகிய கண்ணே என்பது வெறும் அழகியல் சம்பந்தப்பட்டது மட்டுமேயானது அல்ல, பார்வையுடன் கூடிய அழகியல்..!

இது எனது மூத்த சகோதரன், வல்வெட்டித்துறை: ராஜா பாலசந்தரமூர்த்தி என்பவரால், 05 april 1985 ல், அவர் வேலை செய்த கப்பலிலேயே , ஈராக்கிய விமானக் குண்டு வீச்சுக்கு பலியாகும் வரை, அவரது சக உதிரங்களாகிய எனதும், எனது தங்கையினதும் வாசிக்குப்  பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக உருவாக்கம் செய்யப்பட்டிருந்த அஞ்சல்வழிப் பரிமாற்றம்..!

என்னையும், தங்கையும் தன் இரு கண்களாக உருவகம் செய்து, கண்கள் இரண்டு என்றாலும் பார்வை ஒன்றே என்கிற கருத்தாக்கத்துடன், அழகிய கண்ணே என்று ஒருமைப்படுத்தி தலைப்பிட்டிருந்தார்.

என் அண்ணனால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்த, அழகிய கண்ணே என்பது ஒரு தொகுப்பிலான கையெழுத்துச் சஞ்சிகையே..உண்மைதான், எல்லாமுமே எங்கேயோ, எப்போதோ சொல்லப்பட்டவைதான், தொகுப்புத்தான்..!

என் அண்ணனின் நினைவுகள் சுமந்து, அவர் விட்ட இடத்திருந்து தொடர்கிறேன்...